20000 புத்தகம் படித்த அண்ணாமலை தன் கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும் – ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேச்சு!

பாஜக-வினர் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பேசியுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூலின் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய சந்துரு “20000 புத்தகங்களை படித்துள்ளதாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சியினரையும் படிக்க வைக்க வேண்டும்” என்று கூறினார்.

“ஏனென்றால் புத்தகங்களை படித்தால் பாசிச கொள்கையை போக்கலாம்” என்று அவர் பேசினார்.

சமீபத்தில் புதுக்கோட்டைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ‘அறியாதப்படாத கிருஸ்துவம்’ என்ற நூலை வழங்கினார்.

இதனை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். மேலும் அவர்கள், மாவட்ட ஆட்சியருக்கு, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை வழங்கினார்கள்.

இதனை சுட்டிக்காட்டி ‘மாதம் ஓரு எழுத்தாளர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு இவ்வாறு பேசினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.