சென்னை: தமிழ்நாட்டில், அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு பத்திரப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது
தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வந்தன. அரசு புறம்போக்கு நிலம், கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கான நிலங்களை போலி பத்திரங்கள் மூலம் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்து வந்தனர். இதில் பல்வேமுறைகேடுகள் நடைபெற்றதால், அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
இதைடுத்து அங்கீரமில்லாமல் பத்திரப்பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக, தமிழகஅரசு ஆலோசித்து வந்தது. அதையடுத்து, ஆனால், வரன்முறை கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி 14 லட்சம் மனைகளில் 4 லட்சம் மனைகள் மட்டுமே வரன்முறை செய்யப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட தணிக்கையில், தமிழகம் முழுவதும், 168 பல சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜபாளையம் , நத்தம் , ஆம்பூர், காட்பாடி, திருப்பத்தூர், திண்டிவனம் 2ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், திருமங்கலம் அலுவலகம், குன்னூர் சார்பதிவாளர் அலுவலகம், திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகம், சாயல்குடி சார்பதிவாளர் அலுவலகம், ராஜசிங்கமங்களம் அலுவலகம், வடமதுரை , ஒட்டன்சத்திரம் , மேலூர் அலுவலகம், கருங்கல்குடி அலுவலகங்களில் பெயர்கள் உள்ளன.
இதேபோல் திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, வேலூர், சேலம், கோவை, ஊட்டி, நாகை ,கன்னியாகுமரி, மார்த்தாண்டம், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கரூர், உள்ளிட்ட பதிவு மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்த அலுவலகங்களில் விவரங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள
து. எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக ஐஜி சிவன் அருள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, சார்பதிவாளர்கள் தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்த 168 சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளதாக அந்ததுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, அரசு அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரப்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு பத்திரிப்பதிவு செய்யும் பதிவாளர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது