5ஆம் வகுப்பு சிறுமியின் அழுக்கான உடையை துவைத்து கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் பாரா காலா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளிக்கு 5ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி அழுக்கான சீருடையை அணிந்து வந்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிராவன் குமார் திரிபாதி என்பவர் மற்ற மாணவிகளின் முன்னிலையில் அந்த மனைவியின் அழுக்கு சீருடையை கழற்றி, அதை தானே துவைத்தும் கொடுத்துள்ளார்.
அந்த துணி காயும் வரை அந்த மாணவி சுமார் 2 மணி நேரம் உள்ளாடைகளுடன் பள்ளியிலேயே இருந்துள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்ட நிலையில், வைரலானளது.
இந்த சம்பவத்துக்கு அந்த மாணவியின் கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிராவன் குமார் திரிபாதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை அந்த ஆசிரியர் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் தூய்மையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த செயல்களை செய்ததாக அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.
newstm.in