சென்னை : சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள டிரைலர் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?
காபி வித் காதல் திரைப்படம் அக்டோபர் ஏழாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
காபி வித் காதல்
கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு ஜீவா,ஜெய், சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காபி வித் காதல். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வெளியிடுகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இசைவெளியீட்டு விழா
இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில்,சுந்தர் சி, நடிகை குஷ்பு, ஜீவா,ஜெய், ரைசா வில்சன், அம்ரிதா ஆகியோர் கலந்து கொண்டார். இதில் பேசிய, காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படம் என்று சொல்ல ஆசை. ஆனால், இப்போதைக்கு படத்தை அதிகம் பேச வேண்டாம் என்றார்.
ஜோடி பொருத்தம் சூப்பர்
இதையடுத்து காஃபி வித் காதல் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலர் ஆரம்பத்தில் ஜெய்க்கு நிச்சயமாகிறது ஆனால், அந்த பெண் ஓரக்கண்ணால் ஜீவாவை லுக்கு விடுகிறார். இதையடுத்து, இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு என்று சொல்ல, யோவ் அது கதிர் ஆளு என்கிறார் யோகிபாபு.
தனியாக இருக்கலாம்
மூன்று சகோதரர்கள் மூவருக்கும் ஒவ்வொரு காதல் கதை, யாரு யாரை லவ் பண்றா என்பதே டிரைலரை பார்த்தா ஒண்ணுமே புரியல. வழக்கமான சுந்தர் சியின் திரைப்பட பாணியில் இருந்து இந்த படம் சற்று மாறியுள்ளது. தப்பான ஆளோட இருக்குறதவிட தனியா இருக்குறதே மேல், நம்ம லைஃப்ல கூடவே ஆயிரம் பேர் வருவாங்க…ஆனா ஒருத்தி மட்டும் தான் கூடவே இருப்பா என்ற வசனம் சுவாரசியமாக இருக்கிறது. இருந்தாலும் காஃபி வித் காதல் படம் எப்படி இருக்குனு அக்டோபர் 7ந் தேதிக்கு பிறகு பார்க்கலாம்.