இந்தியாவில் தங்கம் டீலர்களுக்கு கடந்த 4 வாரத்தில் முதல் முறையாக, தங்கத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 3 டாலர்கள் பிரீமியம் விலையில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2.5 டாலர்கள் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. .
இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு 15% வரி மற்றும் ஜிஎஸ்டி 3% வரி விதிக்கப்பட்டு வருகின்றது.
டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!
தள்ளுபடியில் தங்கம்
தங்கம் விலையானது 3 டாலர்கள் பிரீமியம் விலையில் இருந்து, 2.5 டாலர்கள் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளது, பலரையும் வாங்க தூண்டலாம். குறிப்பாக விழாக்கால பருவத்தில் கொடுத்திருப்பது மேற்கோண்டு அதிகம் வாங்க வழிவகுக்கலாம். இது ஆபரணத் தங்கம் விலையில் தள்ளுபடியில் விற்பனை செய்ய தூண்டலாம். இது விழாக்கால பருவத்திற்கு ஏற்ப குறைந்துள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
2 1/2 வருட சரிவில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 2 1/2 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் 10 கிராமுக்கு ஆறு மாத சரிவான 49,295 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவில் காணப்பட்டது. இதே வெள்ளி விலை கிலோவுக்கு 55,714 ரூபாயாக சரிவில் காணப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அழுத்தத்தில் காணப்படும் நிலையில், அமெரிக்க டாலர் மதிப்பு, மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் 1637 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகிறது. இதே ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலையில் 18.54 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.
டாலர் மதிப்பு ஏற்றம்
இதற்கிடையில் டாலருக்கு எதிரான 6 கரன்சிகளின் மதிப்பும் சற்று அழுத்தத்தில் காணப்படும் நிலையில், அமெரிக்க மத்திய வங்கி, இங்கிலாந்து மத்திய வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
குறையலாம்.
இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது அழுத்தம் கண்டுள்ளது. இது மேற்கொண்டு குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டாலரின் மதிப்பானது மேற்கொண்டு இந்த வாரத்தில் 110.50 – 111 என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மேற்கொண்டு அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு வரவிருக்கும் வாரங்களிலும் தள்ளுபடி விகிதம் தொடர வாய்ப்பாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gold prices in India move into discount for first time in a month: is it a right time to buy?
Gold prices in India move into discount for first time in a month: is it a right time to buy?/இந்த மாதத்தில் முதல் முறையாக தங்கத்திற்கு தள்ளுபடி.. இனி விலை குறையலாம்?