வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: 2013ம் ஆண்டில் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணினி பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்ய நிரந்தர குடியுரிமை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென் 40. 2013-ல் அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். அமெரிக்க அரசால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், ஹாங்காங்கில் தஞ்சமைடைந்தார்.
அவரை, தங்களிடம் ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. அமெரிக்காவிடம் சிக்கினால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உறுதி என அச்சமடைந்த ஸ்னோடென். ரஷ்யாவுக்கு ரகசியமாகச் சென்றார்.
இந்நிலையில் ஸ்னோடென்னுக்கு ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் கையெழுத்திட்டதாகவும் இணையதள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement