மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பட்டபகலில் ஒரு ஆண்கள் கூட்டம் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக ஊடங்களில் பரவி பார்ப்போரை திகைக்க வைக்கிறது. அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை பரேலி மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் டௌராலா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் செப்டம்பர் 19ஆம் தேதி நடந்துள்ளது. அந்த கொடூரமான வீடியோ பதிவில், இரண்டு ஆண்கள் இரக்கமின்றி ஒரு பெண்ணை தரையில் தூக்கி அடித்து இழுத்துச் செல்கின்றனர். அந்த பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர்விட்டு கதறி அழுகிறார். அந்த இடத்தில் நிறையப்பேர் சுற்றி நிற்கின்றனர். ஆனால் ஒருவர்கூட அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால், அங்கு நடப்பதை சுற்றிலும் நின்றோர் தங்கள் செல்போன்களில் வீடியோவாக படமெடுக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக ஊடங்களில் பரவி வைரலானதை அடுத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டோர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக மீரட் காவல்நிலையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
#MeerutPolice#Uppolice pic.twitter.com/yNtJS80W1U
— MEERUT POLICE (@meerutpolice) September 25, 2022
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, உத்தர பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 56,083 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 31,000 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தில் பதிவாகி இருக்கிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து இதுதான் அதிக எண்ணிக்கை என்கிறது அந்த தரவு.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM