சென்னை : அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் உள்ளனர்.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது. படத்திற்காக இசை வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் டூர் என படத்தை விளம்பரப்படுத்தும் வேலையை படக்குழு தடபுடலாக செய்து வருகிறது.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த, நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
பொன்னியின் செல்வன்
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படம் ஒருவழியாக வெளியாக உள்ளது. டீசர், டிரைலர்,பாடல் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி பொன்னியின் செல்வன் பீவரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதேபோல் வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் சம்பளம்
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. வஞ்சக நெஞ்சம் கொண்ட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
அடேங்கப்பா
அதே போல ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரமிற்கு 12 கோடி ரூபாயும், அருண் மொழிவர்மனாக நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரை வைத்துத்தான் படத்தின் மொத்த கதையும் நகரும்.
குந்தவை சம்பளம்
குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷாவுக்கு ரூ. 2.5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. த்ரிஷா நடித்துள்ள முதல் சரித்திர திரைப்படம் இதுவாகும். வந்தியத்தேவன் கார்த்திக்கு ரூ. 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் ராஜ் சம்பளம்
சுந்தர சோழனாக நடித்த பிரகாஷ் ராஜ் மற்றும் வானதியாக நடித்த ஷோபிதாவுக்கு ரூ. 1 கோடி. பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் ரசித்துள்ளது. இந்த தகவலை சினிமா பிரியர்கள் வேக வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.