வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் இலங்கையர்கள், தனது நாட்டிற்கு பொருட்களை அனுப்பும் போது, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றினூடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்கள் அனுப்புவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பொருட்கள், பயணப்பொதிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என்பவற்றை இலங்கைக்கு அனுப்பும்போது, அவை காணாமல் போகின்றன மற்றும் சேதமடைகின்றன என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு சுங்கத் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது