கார்த்தியின் ஜப்பான் படப்பிடிப்பு அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்குகிறது
விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் கார்த்தி. இதில் பொன்னியின் செல்வன் வருகிற 30ம் தேதி திரைக்கு வரும் நிலையில், சர்தார் அக்டோபர் 24ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அடுத்தபடியாக ஜோக்கர், குக்கூ போன்ற படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கும் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கப் போகிறார் கார்த்தி. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தூத்துக்குடியில் ஜப்பான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்போது படத்தின் பாடல் கம்போசிங் பணிகள் நடைபெற்று வருகிறது.