தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்கு சந்தையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிவில் காணப்பட்டது. இந்த சரிவானது இன்றும் தொடரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2% சரிவினைக் கண்டிருந்தது.
குறிப்பாக சென்செக்ஸ் 1020.80 புள்ளிகள் அல்லது 1.73% சரிவினைக் கண்டு, 58,098.92 புள்ளிகளாகவும் முடிவடைந்திருந்தது. இதே நிஃப்டி 302.45 புள்ளிகள் அல்லது 1.72% சரிவினைக் கண்டு. 17,327.35 புள்ளிகளாகவும் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் பிஎஸ்இ-யில் 588 புள்ளிகள் மற்றும் 564 புள்ளிகள் முறையே சரிவினைக் கண்டு காணப்பட்டன. வங்கித் துறை, கேப்பிட்டல் குட்ஸ், நுகர்வோர் பொருட்கள், ஆட்டோ பங்குகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் சரிவில் காணப்பட்டன.
1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ரூ.5 லட்சம் கோடி வரையில் இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
நிஃப்டியின் போக்கு?
நிஃப்டியின் போக்கு டெக்னிக்கலாக சற்று குறையலாம் எனும் விதமாக உள்ள நிலையில், இது மேற்கொண்டு சரியலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. நிஃப்டியின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 17,000 ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் என எடுத்துக் கொண்டால், 17,500 என்ற லெவல் மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு
கடந்த வெள்ளிக்கிழமையன்றே ரூபாயின் மதிப்பானது இதுவரை இல்லாத அளவுக்கு 81 ஐ தாண்டியது. டாலருக்கு எதிரான மதிப்பு 81.23 ரூபாயாக கடந்த அமர்வில் தொட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பினை தொடர்ந்து மற்ற நாட்டின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரிசர்வ் வங்கி கூட்டம்
ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 25 – 35 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியானது தொடர்ந்து பணவீக்கத்தினை கண்கானித்து வருகின்றது. இது வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கலாம். பணவீக்கம் ஏற்கனவே 7% என்ற லெவலில் இருந்து வருகின்றது. ஆக மத்திய வங்கி இதனை தீவிரமாக கண்கானித்து வரும் சூழலில், முதலீடுகளையும் தக்க வைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையானது கைகொடுக்கலாம்.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்கனவே பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த உச்சத்தினை கண்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 7% ஏற்றத்தினை கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 113 என்ற லெவலில் காணப்பட்டது. இது கடந்த மே 2002க்கு பிறகு அதிகளவிலான உச்சமாகும். மேலும் பணவீக்கத்தினை 2% என்ற லெவலுக்கு கொண்டு வரும் வரையில், அமெரிக்க மத்திய வங்கியானது நடவடிக்கை எடுக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடுகள்
தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இது மேற்கொண்டு வெளியேறலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. செப்டம்பர் மாதத்தில் இதுவரையில் 2445 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதே கடந்த மாதத்தில் 22000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தரவுகள்
இது தவிர சர்வதேச அளவிலான செய்திகள், முக்கிய தரவுகள், எண்ணெய் விலை, நிறுவனங்கள் தரப்பிலான முக்கிய செய்திகள் என பலவும் சந்தையில் தாக்கதினை ஏற்படுத்தலாம்.
sensex Vs Nifty: How is the Indian market today?
sensex Vs Nifty: How is the Indian market today?/சென்செக்ஸ், நிஃப்டி இன்று எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?