170வது படத்தில் ரஜினிக்கு இவ்வளவு சம்பளமா?
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினி நடிக்க உள்ள 170-வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ரஜினி – சிபி இணைய உள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்க உள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.120 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால், ஜெயிலர் படத்திற்கு நடிகர் ரஜினி சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரஜினினியின் 170 படத்துக்காக அவர் வாங்க உள்ள பிரம்மாண்ட தொகை பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.