பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய அரச சின்னம் (Royal Cypher) வெளியிடப்பட்டது.
இது மன்னர் தனது ஆட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டார் என்பதன் அறிகுறியாகும்.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கான அதிகாரபூர்வ அரச துக்கக் காலம் முடிவடையும் நிலையில், செப்டம்பர் 26, திங்கட்கிழமை மாலை, மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது புதிய அரச அடையாள சின்னத்தை (Royal Cypher) வெளியிட்டார்.
அவரது முத்திரை பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், இது வெளியாகியிருப்பது, மன்னர் தனது ஆட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டார் என்பதன் அறிகுறியாகும்.
திங்கட்கிழமை முடிவடைவதற்கு சற்று முன்னர் வெளிப்படுத்தப்பட்ட இந்த சைஃபரில் CRIII என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் C என்பது (Charles) அவரது பெயரையும், R என்ற எழுத்து Rex என்பதையும் குறிக்கிறது. Rex என்பது லத்தீன் மொழியில் மன்னர் அல்லது ராஜா என்று குறிக்கிறது.
இந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இடையில் மூன்று (III)க்கான ரோமன் எண் உள்ளது, இது பிரித்தானிய வரலாற்றில் சார்லஸ் என்று அழைக்கப்படும் மூன்றாவது மன்னர் என்பதைக் குறிக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்த எழுத்துக்களுக்கு கிரீடத்தின் சின்னர் இருக்கும். சைபர் கருப்பு மற்றும் வெள்ளை படமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மன்னர்கள் மிகவும் வட்டமான டியூடர் கிரீடத்தைப் பயன்படுத்த முனைகிறார்கள், ராணிகள் பொதுவாக செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை தங்கள் சைஃபர்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனோகிராம் என்று சொல்லக்கூடிய இந்த சின்னம், சார்லஸின் தனிப்பட்ட சொத்து ஆகும். ஆனால் அரசாங்க கட்டிடங்கள், பாரம்பரிய பொலிஸ் ஹெல்மெட்கள், அரசு ஆவணங்கள் மற்றும் அவரது ஆட்சி தொடங்கிய பிறகு கட்டப்பட்ட எந்த தபால் பெட்டிகளிலும் தோன்றும். இது அரசாங்கத் துறைகள் மற்றும் ராயல் ஹவுஸ்ஹோல்டுகளில் அஞ்சல் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
மன்னர் மூன்றாம் சார்லஸின் புதிய சின்னம் அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தியதை விட மிகவும் வேறுபட்டதாக இல்லை. ராணிக்கான லத்தீன் வார்த்தை ரெஜினா R , அவரது பெயர் எலிசபெத், மற்றும் அந்த பெயரை பயன்படுத்திய இரண்டாவது ஆங்கில மன்னர் என்பதால், அவரது மோனோகிராம் ER II (சில நேரங்களில் E II R) என அறியப்படுகிறது.
இருப்பினும், அவரது சைபர் ஸ்காட்லாந்தில் பயன்படுத்தப்பட்டபோது, II பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் ஸ்காட்லாந்து மத்தலாம் எலிசபெத்தை தங்களது ராணியாக ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, ஸ்காட்லாந்தில் மேரி ராணி மட்டுமே ராணியாக கருதப்பட்டார்.