நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கானநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2022 செப்டம்பர் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

கொழும்பிலிருந்துகாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில்அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.