வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வெளிநாட்டு பண பரிமாற்றம், மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2 வது ரவுண்ட் 8 மாநிலங்களில் இந்த ரெய்டு இன்று (செப்.27) துவங்கியது.
கடந்த வாரம் தமிழகம், கேரளா , புதுடில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 110 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உத்திரபிரதேசம், குஜராத், மஹராஷ்ட்டிரா, அசாம் ,கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் ரெய்டு நடத்தப்படுகிறது. மாநில போலீசாரும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய ரெய்டில் லேப்டாப், சிடிக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. மேலும் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெய்டு நடப்பதற்கான காரணத்தை தேசிய புலனாய்வு படையினர் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement