சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து விபத்து நிகழ்ந்தது. அதிகாலையில் பணிக்கு சென்ற அரசு பணியாளர்களை, ஏற்றி சென்ற பேருந்து மற்றும் லாரி மீது மெட்ரோ பில்லர்கள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று காலை குன்றத்தூரில் இருந்துTN01 N5450 என்ற அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. அந்த பேருந்தில், அரசு பேருந்துகளில் பணியாற்றும் எட்டு பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் அலந்தூர் சென்றுக் கொண்டிருந்தனர்.
ஆலந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ராமபுரம் பகுதியில் செல்லும்போது, அங்கு மெட்ரோ மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த பில்லர் தவறி, பேருந்து மற்றும் லாரி மீது விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது. பேருந்தின் ஓட்டுநர் அய்யாதுரை (52), பேருந்து நடத்துனர் பூபாலன் (45), லாரி டிரைவர் ரப்சித் குமார் ஆகியோருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.