Nasa DART: விண்கல் மீது மோதிய நாசா விண்கலம்! கொண்டாட்டத்தில் Nasa நிர்வாகம்

NASA நிறுவனம் உலக விண்வெளிஆராய்ச்சியில் நம்பர் 1 நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் விண்கல் மீது விண்கலத்தை மோதவைக்க சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அதாவது ஒரு நாள் ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கும் என்றால் அதனை தடுக்க இதுபோன்ற விண்கலனை பயன்படுத்தி அந்த பெரிய அளவு விண்கல் மீது மோதவைத்து அதனை திசைதிருப்ப நாசா நிறுவனத்தின் நடத்திய ஒரு சோதனை முயற்சி ஆகும்.

இதற்காக DART எனப்படும் விண்கலனை சுமார் 7 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள Dimorphous எனப்படும் விண்கல் மீது சுமார் 22,500 KM H வேகத்தில் மோதவிட்டு சோதனை செய்தனர்.

இந்த முதலாம் அந்த விண்கல்லில் மிகப்பெரிய அளவு பள்ளம் உண்டாகும் எனவும், பெரிய அளவு பாறைகளை சிதறடிக்கும் என்றும், விண்வெளியில் புகைமண்டலத்தை உண்டாக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தனர்.

மேலும் மிகவும் முக்கியவிஷயமாக அந்த விண்கல்லின் வட்டப்பாதையை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்த்தனர். இவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த விண்கலம் அந்த கல்லின் மீது மோதி இத்தனை விஷயங்களை நிகழ்த்தியுள்ளது.

இந்த நிகழ்வு ஏற்பட்ட சமயம் விண்வெளி மற்றும் பூமியில் உள்ள டெலஸ்கோப் அனைத்தும் இந்த விண்கல்லை நோக்கியே இருந்தன. இதன் மோதல் விவரம் தெரிந்தது என்றாலும் இதனால் அந்த விண்கல்லின் சுற்று பாதை மாறியதா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த விவரம் தெரியவர சில நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். இந்த பயணத்திற்காக 325 மில்லியன் செலவு செய்த நாசா நிர்வாகம் விண்கல்லின் சுற்று பாதையை மாற்ற உலகத்தில் எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இதனை பார்க்கின்றனர்.

இதைப்பற்றிய தெரிவித்த அந்த குழுவின் தலைவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான
‘Armageddon’
போல இதனை பலர் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இது அதை விட மிகவும் பெரிய விஷயம் என்று கூறியுள்ளது.

இந்த முறை இலக்காக நிர்ணயம் செய்தது 525 அடி உயரம் கொண்ட Dimorphos விண்கல். இதனுடன் இன்னொரு இணை கல் உள்ளது. அதன் பெயர் didymos. இது சிறிய கல் என்றாலும் மிகவும் வேகமாக செல்லக்கூடியது.

இந்த இரு விண்கல் சூரியனை உலகத்தை போலவே சுற்றிவந்த. இவற்றால் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. இதன் காரணமாகேவ இந்த இரு விண்கல் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த DART வினைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் செம்மர Dimorphos விண்கல்லின் புகைப்படத்தை ஒரு மணிநேரத்திற்கு முன்புவரை படம் எடுத்துவந்தது. இந்த மோதல் காரணமாக அந்த கல்லின் சுற்று பாதை 1% மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் சிறியதாக இருந்தாலும் இது வரும் காலங்களில் பெரிய அளவு மாற்றத்தை உருவாக்க ஒரு தொடக்கமாக அமையும். டைனோசர்களுக்கு இதுபோன்ற ஆராய்ச்சி மைய்யங்கள் இருந்திருந்தால் அவை இன்று உயிரோடு இருந்திருக்கும் என்று நாசா நிர்வாகம் கிண்டலாக தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.