பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இன்னொரு துயர சம்பவம்: ராணியாருக்கு நெருக்கமானவர் மரணம்


முடிசூட்டு விழாவில் ராணியாரின் 21 அடி நீளமான உடையை சுமந்து செல்லும் பணி

அந்த சிறப்பு உடையை சுமந்து செல்ல கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்

மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவரும், ராணியாரின் முடிசூட்டு விழாவில் உதவியவருமான பெண்மணி மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மறைந்த ராணியாரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் லேடி மேரி ரஸ்ஸல் அவரது குடியிருப்பிலேயே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இன்னொரு துயர சம்பவம்: ராணியாருக்கு நெருக்கமானவர் மரணம் | Monarch Funeral Died Night Queen Maid

@getty

88 வயதான லேடி மேரி ரஸ்ஸல் ஏர்ல் ஹாடிங்டன் என்பவரின் மகள் எனவும், ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில், அவருக்கு உதவிய 6 பெண்களில் ஒருவர் எனவும் கூறுகின்றனர்.

முடிசூட்டு விழாவில் ராணியாரின் 21 அடி நீளமான உடையை சுமந்து செல்லும் பணியில், இந்த 6 பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயம் வழியாக கேன்டர்பரி பேராயர், பின்னர் ஜெஃப்ரி ஃபிஷரை நோக்கி இந்த பயணம் நீண்டுள்ளது.

ஆனால், ராணியாரின் அந்த சிறப்பு உடையை சுமந்து செல்ல கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என லேடி மேரி ரஸ்ஸல் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த 6 பேர்களில் தற்போது இரண்டாவது நபராக தமது 88வது வயதில் லேடி மேரி ரஸ்ஸல் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இன்னொரு துயர சம்பவம்: ராணியாருக்கு நெருக்கமானவர் மரணம் | Monarch Funeral Died Night Queen Maid

@getty

2020ல் லேடி மொய்ரா காம்ப்பெல் உடலநலக் குறைவால் மரணமடைந்தார். தற்போது உயிருடன் இருப்பவர்கள், டோவேஜர் பரோனஸ் க்ளென்கோனர், லேடி ஜேன் லேசி, பரோனஸ் வில்லோபி டி எரெஸ்பி மற்றும் லேடி ரோஸ்மேரி முயர் ஆகிய நால்வருமே.

லேடி மேரி ரஸ்ஸல் மரணமடைந்துள்ள தகவல், பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினர்களை கவலை கொள்ள செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.