நான் ஒருத்தன் தான் கட்சிகாரங்கள கூப்பிட்டு மணல் அள்ளுங்கனு சொன்னேன். வேறு எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரங்கள மணல் அள்ளுனு சொன்னது இல்லை. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் கேர்ஆர்என் ராஜேஷ்குமார் பதிவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த வனிதா செங்கோட்டையன் என்பவர் ராசிபுரம் அடுத்துள்ள காக்காவேரி பகுதியில் பல ஆண்டுகளாக மணல் அள்ளி வருவது கூறப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்து ஐந்தே மாதங்களில் இதுவரை மணல் அள்ளக் கூடாது என திமுக மாவட்ட பொறுப்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான கே.பி.ராமசாமி என்பவர் அப்பகுதியில் மணல் அல்ல எம்பி அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாகவே எம்பிக்கும் அனிதா செங்கோட்டையனுக்கும் மோதல் போக்கு இருந்தது. இந்நிலையில் மீண்டும் இது தொடர்பாக எம்பி இடம் கேட்டபோது அவரை மீண்டும் மணல் அள்ள கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் அதில் திமுகவை பொறுத்தவரை எந்த மாவட்ட செயலாளரும் கட்சியினரை மணல் அல்ல அனுமதித்தில்லை எனவும் தான் ஒருவன் மட்டுமே கட்சியினரை மணல் அல்ல அனுமதித்துள்ளதாகவும் எம்.பி.ராஜேஷ்குமார் பேசிய அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#DMKruinsTN #மணல்திருடும்_திமுக
மற்ற மாவட்ட செயலாளரெல்லாம் கம்பெனிக்காரனை மண் அள்ள சொல்லிட்டு பணம் வாங்கிட்டு போயிட்டான். நாமட்டும் தான் நம்ம கட்சிக்காரங்களையே மணல் அள்ள சொல்லி இருக்கேன்.திமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் பெருமிதம்.
மேய்க்குறது எருமை
இதுல பெருமை வேற pic.twitter.com/BZseeegOLq— P seenikumar (@PSeenikumar) September 27, 2022
மேலும் இதுதொடர்பான முழுமையான காணொளி கிடைக்கப்பெறவில்லை. திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் திமுகவினர் சட்டவிரோதமாக மணல் அள்ளுங்கள் என எம் பி பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்வர் அவர்கள் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்வதோ சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்திய நிலையில் எம்.பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.