பெங்களூவில், பெண்கள் தங்களுக்கு தேவைப்படும் பாய் ஃப்ரெண்டை வாடகைக்கு எடுக்கும் டாய்பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூவில், பாய் ப்ரெண்டை வாடகைக்கு எடுக்கும் டாய்பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் தங்களிடம் ஆறுதலாக பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு டாய்பாய் போர்ட்டலுக்கான ஏபிகே பைலை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பெங்களூரு நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.