57 ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர்.. கிராம மக்கள் கொண்டாட்டம்..!

ந்தியாவில் முதல் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ் டிவிஷன் பகுதிக்கு உட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 157 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பகுதிக்கு நீண்ட காலமாகவே சாலை வசதி கிடையாது.

மேலும், இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிலிண்டர் இணைப்புக்கான ஆவணங்கள் இல்லாததால் நீண்டகாலமாக சிலிண்டர் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதனால் இந்த கிராம மக்கள் சமையலுக்கு விறகுகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதனால் மழைக் காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, சிலிண்டர் இணைப்பு கேட்டு மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, தற்போது அந்த கிராம மக்களுக்கு எல்பிஜி சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் கம்லுங் மொசாங் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.