வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் ராணுவ வீரரை சிறைப்பிடித்துள்ள ரஷ்யா, அவரை துன்புறுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய பிடியில் இருந்து தப்பிய அவ்வீரரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். மேலும், ரஷ்யாவின் போர் குற்றங்களை உக்ரைன் அவ்வபோது வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் தற்போதைய நிலையை புகைப்படமாக உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் துன்புறுத்தப்பட்ட அந்த வீரர், ரஷ்ய பிடியில் இருந்து தப்பியுள்ளார். எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளிப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம், ‘உக்ரேனிய சிப்பாய் மைக்கைலோ டியானோவ் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். அவரது சக போர்க் கைதிகள் சிலர் இன்னும் ரஷ்யாவின் பிடியில் இருக்க, இவர் ரஷ்ய சிறையிலிருந்து தப்பினார். போர் கைதிகள் குறித்த ஜெனிவா உடன்படிக்கைகளை ரஷ்யா இப்படித்தான் கடைப்பிடிக்கிறது. நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷ்யா இப்படித்தான் தொடர்ந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement