நளினி மனு மீதுசுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

புதுடில்லி,:ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதே வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினர். இந்த மனு மீது, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.