நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் காங்கிரசின் தலைவர் தேர்தலை நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அக்டோபரில் நடத்தப்படவுள்ள தலைவர் தேர்தலில் போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பெயர் அடிப்படுகிறது. இதனால் கொதித்துப்போன சச்சின் பைலட்,
காங்கிரஸ்
தலைவராக விருப்பமிருந்தால் முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட் விலக வேண்டும் என்று போர்கொடியை தூக்கியுள்ளார். ஆனால், அசோக் கெலாட்டுக்கு 90க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர்.
அதே சமயம், கெலாட்டுக்கு காங்கிரஸ் பதவியை கொடுத்துவிட்டால் முதல்வர் பதவியை சச்சின் பைலட் தட்டி செல்வார் என்று கூறப்படுகிறது. அதற்கு செக் வைக்கும் கெலாட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சச்சின் பைலட்டை முதல்வராக அறிவித்தால் கூட்டாக அனைவரும் ராஜினாமா செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த கொந்தளிப்பின் மத்தியில் அசோக் கெலாட், கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க டெல்லிக்கு விரைந்துள்ளார். ஆனால், அதிகாரபூர்வமாக இதுவரை எந்த சந்திப்பும் முடிவு செய்யப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அசோக் கெலாட்டுக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் பைலட் கிளர்ச்சி செய்தபோது அரசாங்கத்தை நிலைநிறுத்திய பங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உண்டு. அதை தற்போது சுட்டிக்காட்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுக்காமல் தங்கள் குழுவில் இருந்து ஒருவரை நியமியுங்கள் என்றும் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததும் வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்., 17 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்கள் கடந்த 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என கட்சி அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.,19 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.