மேதினி நகர், கணவர் கண் முன்னே இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாலமு மாவட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் 22 வயது இளம்பெண், கணவரிடம் கோபித்து, 24ம் தேதி இரவு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். அருகிலுள்ள லதேகர் மாவட்டத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு நெடுஞ்சாலையில் நடந்தே சென்றார்.
சற்று நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவரும், உறவினர் ஒருவரும் அங்கு வந்து, நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை சமாதானப்படுத்தினர். அப்போது அங்கு இரண்டு பைக்குகளில் வந்த ஆறு பேர், கணவரையும், உறவினரையும் தாக்கினர். பின், கணவர் கண் முன் அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண்ணின் அலறல் கேட்டு, அருகிலுள்ள கிராம மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆறு பேரும் தப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார், அந்தப் பெண், கணவர், உறவினர் மூவரையும் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய ஆறு பேரையும் நேற்று முன்தினமும், நேற்றும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement