பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ? கமிஷன் வராததால் அதிருப்தி – கோபாலபுரம் பரபர

கரூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசவிரோத வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் கரூரில் பாஜக நிர்வாகிகள் வீடுகளிலும், கிராமப்புறங்களிலும் பாதுகாப்பு வழங்கிய போலீசார் செயல் தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. அவர்களால் மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை.

மத வாத கட்சியா? பாஜக மதவாத கட்சியா? என்று முதல்வர் தான் சொல்ல வேண்டும். ஒரு மத நிகழ்வுக்கு வாழ்த்து கூறுகிறார். மற்றொரு மத நிகழ்விற்கு வாழ்த்து கூற மறுக்கிறார். தமிழகத்தில் தற்போது நிலை வரும் திமுக ஆட்சி ஒரு சாபக்கேடு.

திமுக எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைய உள்ளனர் என்ற கருத்து குறித்து கேள்வி கேட்டதற்கு, அனைத்து கமிஷனும் கோபாலபுரம் செல்வதால் தற்போது உள்ள எம்எல்ஏக்கள் விரக்தியில் உள்ளனர். ஆகையால் தான் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் நேரடியாக சென்று பொதுமக்களை மிரட்டி கமிஷன் கேட்கும் அளவிற்கு செல்கின்றனர். இன்னும் சிறிது காலத்தில் சாலையை மறித்து தடுத்து பறிக்கக்கூடிய நிலை கூட தமிழகத்தில் ஏற்படலாம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்லும் இயக்கம். 100 ஆண்டுகளை கடந்த இயக்கம். ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி பார்ப்பதற்கு வட மாநிலங்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுத்து திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனுப்பி வைக்கிறேன். அங்கு சென்று ஆர்எஸ்எஸ் செய்த வேலைகள் குறித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளன.

எனக்கு கட்சியை நடத்தவே நேரம் இல்லை. எம்.பி, எம்எல்ஏ பதவிகள் மீது எனக்கு ஆசை இல்லை. தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித கண்டன அறிக்கையை முதல்வர் தெரிவிக்கவில்லை. ஆனால், பதிலுக்கு எங்கள் மீது பழியை சுமத்துகிறார்.

முதல்வர் அவ்வப்போது கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அவரை தட்டி எழுப்பிகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.