'திராவிட மாடல்' என்ன தமிழ் வார்த்தையா? -ஸ்டாலினை கலாய்த்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமது கலகலப்பான பேட்டிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சித்து வருவதுடன், கேள்விகளால் துளைத்தெடுத்தும் வருபவர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் பொன்முடியின் ஓசி பஸ் விவகாரம், திராவிட மாடல் உள்ளிட்டவை குறித்து திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

‘அமைச்சர் பொன்முடி படித்தவர், பண்பாளர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் பெண்களை பார்த்து நீங்கள் பஸ்சில் ஓசியாக தானே பயணிக்கிறீர்கள் என்று கேட்கிறார். மக்கள் செலுத்தும் வரி்ப் பணத்தில்தானே அரசு பஸ்களை வாங்குகிறது? அப்படி இருக்கும்போது ஏதோ அவர் சொந்தமாக பஸ் விட்டுருப்பதை போல ஏளனமாக பேசி உள்ளார்.

அத்துடன் பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் நீங்கள் தாழ்த்தப்பட்டவரா என கேட்டுள்ளார். அத்துடன் நிற்காமல் இந்த உரிமையெல்லாம் உங்களுக்கு பெரியார் போட்ட பி்ச்சை என்றும் அமைச்சர் பொன்முடி அதிகார மமதையில்் பேசியுள்ளார். அப்படியானால் மக்கள் என்ன பிச்சைக்காரர்களா?’ என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

‘திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தமிழ்… தமிழ் .. என்று பரப்புரை செய்து வருகிறார். ஆனால் நடைமுறையில் அரசு கோப்புகள் முதல் வணிக நிறுவனங்களின் பெயர் வரை எங்கும் தமிழ் இல்லை.

அத்துடன் அவர் மேடைக்கு மேடைக்கு திராவிட மாடல் என்று முழங்கி வருகிறார். இதில் திராவிடம் என்பது சமஸ்கிருதம்; மாடல் என்பது ஆங்கிலம். இப்படி இருக்கும்போது தமிழ் எப்படி வளரும்?’ எனவும் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.