திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்கள் என 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது வருடாந்திர பிரம்மோற்சவம் பிரம்மனே முன்னின்று நடத்தியதாக ஐதீகம். இதன் காரணமாகவே இதனை பிரம்ம உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மிகக் கோலாகலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் நடத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் மிக கோலாகலமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள சுவாமி வீதி உலாவை காண வரும் பக்தர்கள் மூலவர் ஏழுமலையானையும் தரிசனம் செய்யும் விதமாக ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம், விஐபி தரிசனம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான முன்னுரிமைகள் தரிசனம் என அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில் இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்களை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்யும் வரும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் நான்கு மாடவீதியில் நாதஸ்வர இசைக்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஊர்வலத்தில் கேரள சண்டை மேளம் பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர். பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதின் மூலம் சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று முக்கோடி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.