ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ!! 11 நாட்கள் தொடர் விடுமுறை..

டெல்லி ஐஐடி மாணவர்கள் இருவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் மீஷோ என்ற ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியை தொடங்கினர். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல ஷாப்பிங் நிறுவனங்கள் மத்தியில், சந்தையில் நுழைந்த சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது மீஷோ நிறுவனம்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத் தள்ளுபடி விற்பனை தணிந்தவுடன், ஊழியர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களுக்கும் 11 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

அக்டோபர் 22-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த விடுப்பிற்கு ரீசெட் அண்ட் ரீசார்ஜ் எனப் பெயர் வைத்துள்ளனர். இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இருக்கும் மீஷோ அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான சஞ்சீவ் பர்ன்வால் தனது ட்விட்டரில், வொர்க் – லைப் பேலென்ஸ் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த முடிவை அறிவித்தார். இந்த நேரத்தில், ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தவாறு நேரத்தை செலவிடலாம். மேலும் மென்டல் ஹெல்த் மிகவும் முக்கியம் எனழும் தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.