இம்முறை உலக தொழில் முயற்சியாளர் வாரத்தை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இலங்கையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அதாவது 2024 வரை முன்னெடுக்கின்றது.
உலக தொழில் முயற்சியாளர் வாரம் (GEW) என்பது தொழில் முயற்சியாளர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களை வலுவூட்டுவதற்கான சர்வதேச செயற்பாடாகும். இவ் செயற்பாடு 180 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய தொழில் முயற்சியாளர்களின் வலைப்பின்னலில் (GEN) அனைத்து நாடுளிலும் உள்ள புதிய தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு, எதிர்வரும் 3 வருடங்களுக்கு (2024) இந்த வர்த்தகர்களை சிறப்பான முறையில் ஊக்குவிக்கும் மற்றும் வலுவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலக தொழில் முயற்சியாளர் வாரத்தில் (The Global Entrepreneurship Week -(GEW) ஒன்றிணையுமாறு புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு (Start-up) தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அழைப்பு விடுத்துள்ளது.
உலக தொழில் முயற்சியாளர் வாரத்தை, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சர்வதேச ரீதியில் 20,000 இற்கும் மேற்பட்ட பங்காளர்கள் பங்குபற்ற உள்ளத்துடன், இம்முறை சர்வதேச மட்டத்தில் 40,000 செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தொழில் முயற்சியாளர்கள் முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், குறித்த அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இவ்வருடத்தில் தொழில் முயற்சியாளர்கள் (GEW – 2022) வாரம், நாட்டில் புதிய வர்த்தக சுற்றாடல் கட்டமைப்பு, கல்வி , உட்படுத்தல் மற்றும் கொள்கை போன்ற நான்கு தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ளது.
உள்நாட்டில் காணப்படும் தொழில் முயற்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு மற்றும் தொடர்பை வலுவூட்டி நாடு முழுவதும் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள புதிய தொழில் முயற்சியாளர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக குறிப்பிட்ட வாரம் முழுவதும் பல்வேறு தகவல்களை பரிமாற்றுதல் கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் மற்றும் திட்டங்களை முன்னெடுத்து, நாடு என்ற ரீதியில் பொருளாதாரத்தை (start-up) ஊக்குவிப்பதற்கும், புதிய தொழில் முயற்சியாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களது சேமநலன்களை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக புதிய வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் அவசியமான பயிற்சி, ஆலோசனை மற்றும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலக தொழில் முயற்சியாளர் வாரத்தில் இளம் சமூகத்தினர் வர்த்தகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கு உருவாக்கப்படும் மேடையாக ‘உலக தொழில் முயற்சியாளர் வாரம்’ அடையாளம் காணப்பட்டுள்ளது .
சுற்றுச்சூழல் கட்டமைப்ப செயல்பாடுகளை முன்னெடுப்போர் Ecosystem enablers, உலக தொழில் முயற்சியாளர்கள் GEW வாரத்தில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் (GEW ) shorturl.at/HQX24 என்ற முகவரியில் தமது பதிவுகளை மேற்கொள்ளமுடியும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக மேலதிக விபரங்களையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.