கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும் விழா சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் பெண்கள் உள்ளிட்ட சுமார் 2000 பேர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் :- 

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மக்கள் பிரச்சனை குறித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியது. எதற்காக பொதுக்கூட்டம் நடத்தினோமோ அதற்கான தீர்வாக எல்லாவற்றையும் திமுக அரசு செய்து வருகிறது. 

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டிற்குள் 1053 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வய் கட்டுகிறார்கள்.  சென்னை மாநகராட்சியாக மாறி 330 ஆண்டுகளில் இதுவரை உறுவான மழைநீர் வடிகால்வாய் 2100 கிலோ மீட்டர். ஆனால் இந்த ஓராண்டில் மட்டும் 1053 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீ வடிகால்வாய் பணி நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே அமைக்கப்படுள்ள கல்வாய்களில் தூற்வாரும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இதுபோன்ற ஆட்சி தமிழகத்தில் இதுவரை கண்டதில்லை அனைவரும் பாரட்டி வருகின்றனர் ஆனால் வயிற்றெரிச்சல் காரர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் புலம்பிவருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

இதில் பேசிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு :- 

சென்னை மக்களுக்கு 24 மணி நேரமு குடிநீர் கிடைக்க வேண்டும் அதற்காக திட்டப்பணிகளை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதாக கூறினார். 

அனைத்து இடங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், அனைத்து இடங்களிலும் கழிவறை திட்டம், 980 பழைய கழிவறைகளை புதிதாக மாற்ற டெண்டர் விடப்பட்டதாகவும் தெரிவித்தார். 

வருங்காலத்தில் அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதியும் பெற்ற நகரமாக சென்னை மாநகரம் உருவாகும் அதற்காக தனி நிதி ஒதுக்கியுள்ளார் தமிழக முதல்வர். 

இதுவரை தமிழகத்திற்கு வேலான் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. நான் முதல் முதலாவதாக அமைச்சராக ஆனபோது தமிழகத்தின் பட்ஜெட்டே வெரும் 50 ஆயிரம் கோடிதான். 

கடந்த 10 ஆண்டு காலத்தில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் காண்ராக்ட் விடுவது பணம் எடுப்பது மட்டுமே நடைபெற்றது என்று குற்றம்சட்டினார். 

21 மாநகராட்சிகள், 138நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் 1400 கோடி பணம் இந்தாண்டு மட்டும் 1400 கோடி என கூடுதலாக பணம். 

அனைத்து நகரங்களிலும் பேருந்து நிலையம், மார்கெட், உள்ளாட்சிகளுக்கு வருமானம் இல்லா கடைகள் என்று இந்த துறையை தனி கவனம் செலுத்தி நடத்தி இருகிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.