கடந்த சில நாட்களாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்த செய்திகள் தான் தலைப்பு செய்திகளாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடியான ரெய்டு, கைது நடவடிக்கைகள், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் என அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பி.எஃப்.ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனுடன் தொடர்பில் இருக்கும் அல்லது சார்ந்து இயங்கும் 8 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அவை, ரிஹால் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இனாம்ஸ் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன், நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அண்ட் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவை ஆகும்.