புதுடில்லி: பங்குச்சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவரது ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 வரை, பதவிவகித்தபோது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ‘செபி’ எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக சித்ரா மீது புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ., கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமின் கோரி சி.பி.ஐ. ,சிறப்பு கோர்ட்டில் சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை கடந்த மே 12ம் தேதி விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சித்ரா ராமகிருஷ்ணன், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்தார். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்கி டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement