சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுங்க.. போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு..!

சென்னை முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை முழுவதும் உள்ள 47 பெரியார், 17 அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அண்ணாவின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று அதிகாலை யாரோ சிலர் செருப்பு மாலை அணிவித்து, முகத்தை சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும் திமுக எம்பி ஆ.ராசா படத்தை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அண்ணா சிலையில் தொங்கவிட்டதுடன், சிலையின் முகத்தை திமுக கொடியால் மூடி வைத்துள்ளனர். இதுபோன்று பல இடங்களிலும் அண்ணா மற்றும் பெரியார் சிலைகளை மர்ம கும்பல் அவமதித்து சேதப்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. அத்துடன், சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அண்ணா சாலையில் உள்ள பெரியார் – அண்ணா சிலைகள் உட்பட, சென்னை முழுவதும் உள்ள 47 பெரியார், 17 அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன், சிலைகள் இருக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.