இந்த சூழலில் அவதூறு அண்ணாமலையின் பேச்சு மிகவும் கேவலமாக உள்ளது: துரை வைகோ காட்டம்

திருச்சி திருவானைக்கோவில் வெங்கடேஸ்வரா தியேட்டரில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படம் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக கட்சி நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் மறுமலர்ச்சி குடும்பங்களின் தியாகத்தை போற்றவும் மாமனிதன் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

‘மாமனிதன் வைகோ படம் இன்று திருச்சியில் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று கோவையிலும் அதற்கு முன்னர் தென் மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி ஒளிபரப்பப்பட்டது. தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். 

ஆனால் பா.ஜ.க உடன் தொடர்புள்ள ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

durai vaiko

அண்ணன் தம்பிகளாக பழகும் இந்து முஸ்லிம்களிடம் வேற்றுமையை உருவாக்கி வாக்கு வங்கியை நிரப்ப சில சக்திகள் முயற்சிக்கிறார்கள். அதற்கு நாம் பலியாகி விட கூடாது. அடிப்படை தேவைகளைப் பற்றி பேசாமல் ஜாதி மத அடிப்படையில் அரசியல் நடக்கிறது. பொதுமக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓசி பேருந்தில் பெண்கள் பயணிக்கிறார்கள் என்ற அமைச்சர் பொன்முடியும் கருத்து குறித்து கேட்கப்பட்ட கெள்விக்கு பதிலளித்த அவர், ‘அவர் சொன்ன கருத்து தவறான விதத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.’ என்று தெரிவித்தார்.

durai vaiko

‘நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல’ என்ற அண்ணாமலையின் கருத்துக்கு, ‘அவதூறு அண்ணாமலை நிறைய கருத்துக்கள் சொல்லி வருகிறார். இங்கு மதக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது இது போன்ற கருத்துக்கள் அவர் சொல்வதின் நோக்கம் என்ன? ஒரு ஐபிஎஸ் படித்த நபர் இது போன்ற கருத்துக்கள் சொல்வது மிகவும் கேவலமானது’ என்று தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.