சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட கிழக்கு சீனாவில் உள்ள, ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற இடத்தில், உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பொதுவெளியில் தோன்றிய அதிபர்… வீட்டுக் காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி!
எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளரை கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.