இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு ,பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
‘இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக சமூக-பொருளாதார அபிவிருத்தி‘ எனும் தொனிப்பொருளில் முதுநிலை விரிவுரையாளர் எச்.எம்.ஏ. ஹில்மியின் ஒருங்கிணைப்பில் இன்று (28) நடைபெற்ற ஆய்வரங்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பிரதம பேச்சாளராக மலாயா பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அகடமி துணைப் பேராசிரியர் கலாநிதி அஸ்மா அப்துர் றஹ்மான் உரையாற்றினார்.
ஆய்வரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் 49 ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது