கோட்டை விட்ட எடப்பாடி; செம குஷியில் ஓபிஎஸ் டீம்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும்

இடையே கடும் போட்டியும், அதையொட்டி மோதல் போக்கும் நிலவி வருகிறது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரை கட்சியில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் டென்ஷன் ஆன ஓ.பன்னீர்செல்வம் ஒரே நேரத்தில் பாஜக மேலிடம், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என 3 கதவுகளை தட்டி தனக்கு ஆதரவான சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

இதில் கீழமை நீதிமன்றம் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதையடுத்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விசாரணைக்காக காத்திருக்கிறார்.

அடுத்ததாக பாஜக மேலிடத்தை பொறுத்தவரை ஓபிஎஸ்சுக்கு சாதகமான நிலையில் உள்ளதாகவே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிருப்தியும், ஓபிஎஸ் தரப்பில் உற்சாகமும் களைகட்டி உள்ளது.

இதில், மிச்சம் இருப்பது தேர்தல் ஆணையம். அந்தவகையில், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் அதிமுக. உள்கட்சி மோதல் விவகாரத்தை கண்டு கொள்ளவே இல்லை என்று தான் கூறப்படுகிறது.

பொதுவாகவே அரசியல் கட்சிகள் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அதன் மீது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துவிடும்.

ஆனால் அதிமுகவில் மோதல் தொடங்கி 3 மாதம் ஆக போகும் நிலையில் தேர்தல் ஆணையம் இன்னமும் ‘கப்சிப்’ என்று தான் இருக்கிறது. இது குறித்து விசாரிக்க சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி சென்றுள்ளனர்.

அப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பட்டியலை எடப்பாடி தரப்பினர் சமர்ப்பித்தபோது அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டதாக

கூறப்படுகிறது.

இதற்கு என்ன காரணம் என, எடப்பாடி பழனிசாமி தரப்பு விசாரித்தபோது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் போதெல்லாம் சூட்டோடு சூடாக மாவட்ட வாரியாக உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி வந்து உள்ளனர்.

இதன் பின்னர் அதை தனித்தனி புத்தகமாக தொகுத்து அதன் நகலை தான் டெல்லிக்கு கொண்டு போய் கொடுத்து வந்துள்ளனர். அத்துடன் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இணைக்கப்படுவது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

இந்த நடைமுறையை தற்போது எடப்பாடி தரப்பு அதிமுகவினர் பின்பற்றாததால் தான், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மவுனம் காப்பதும், இது.. ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான சூழல் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் சாதகமான உத்தரவை எதிர்பார்த்து ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.