சசிகலாவுடன் எப்போது சந்திப்பு? ஓபிஎஸ் ஹிண்ட்!

அதிமுகவில் சசிகலாவை இணைக்கும் முயற்சிகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்த ஓபிஎஸ், ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு பிறகு,

, டிடிவி ஆகியோருக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் நேரில் சென்றும் அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அதிமுகவில் இருந்து எல்லோரும் வந்தாலும் சந்திப்பேன் என சசிகலா தெரிவித்துள்ளார். ஒற்றுமையாக செயல்பட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் ஓகே சொல்லி விட்ட நிலையில்,

மட்டும் தனது முடிவில் விடாப்படியாக இருக்கிறார். சசிகலாவை பொறுத்தவரை ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமி உள்பட அரவணைத்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனாலும், ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை இன்னமும் அவர் நேரில் சந்திக்கவில்லை. திரைமறைவில் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் எதேச்சையாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மற்றும் சசிகலா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். ஓபிஎஸ் முதலில் சென்று சசிகலாவை சந்தித்தாலோ அல்லது சசிகலா சென்று ஓபிஎஸ்ஸை சந்தித்தாலோ ஒருவரின் கீழ் மற்றொருவர் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், யார் முதலில் சென்று சந்திப்பது என்பதில் ஈகோ பிரச்சினை நிலவுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சந்தித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை பெற வந்ததாக தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே தங்களுக்கு நல்ல ஆலோசனைகளை பண்ருட்டி ராமச்சந்திரன் வழங்கி வருவதாக தெரிவித்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் இருந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய ஆசிகளையும் பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடன் இருந்தவர்கள் என சசிகலாவைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதனை எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.

முன்னதாக, அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை

நியமித்தார். இதையடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததில் இருந்தே சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து தெரிவித்து வருவதுடன், அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.