தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு… நீதிமன்றத்தை நாடிய ஆர்எஸ்எஸ்!

அக்டோபர் 2 -ம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் நடத்த எந்த அமைப்புகளுக்கும் அனுமதியில்லை என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றமும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடி உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், தமிழக காவல்துறையும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.