சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கு உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் எப்போது செய்யலாம் என்பது குறித்த வழக்கனது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பு செய்வதற்காக முழு சுதந்திரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என நீதிபதிகள் கூறியுள்ளனர். கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சட்டப்பிரிவு 3 பிசி திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களிடையே செயற்கையான வேறுபாட்டை உருவாக்குவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் கணவனால் வன்புணர்வு செய்யப்பட்டால் அதன் மூலம் உருவான கருவை, இந்த கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் அந்த கருவை கலைக்க அனுமதி உள்ளது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றாள் அதனை கலைப்பதற்கு, சிறுமிகள் கருவுற்றால் அதனை கலைப்பதற்கும், கருவில் இருக்க கூடிய குழந்தை ஊனமுற்று இருந்தாலோ அல்லது வேறு ஏதும் மருத்துவ காரணங்களுக்காவும் கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.