சர்வதேச அளவில் விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஒரு நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘
பீட்டா
’ அமைப்பு, அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வரும் இந்த அமைப்பில், லட்சக்கணக்கான பெண்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் (பாலியல் உறவுக்கு தடை) செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. பெண்களை விட மாமிசம் சாப்பிடும் ஆண்களே 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர். இது உலகம் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்ற பிரச்சினை.” என்று பதிவிட்டுள்ளது. உலகைக் காக்க இறைச்சி உண்ணும் ஆண்களிடம் உடலுறவை நிராகரிக்கு போராட்டத்தில் பெண்கள் ஈடுபட வேண்டும் எனவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
PLOS ONE என்ற அறிவியல் இதழின் ஆராய்ச்சி ஒன்றை மேற்கோள்காட்டி, பெண்களை ஒப்பிடுகையில் ஆண்களே அதிக இறைச்சி உண்பதாகவும், இதனால் 41 சதவிகிதம் கார்பன் வாயு வெளியேற்றத்துக்கு ஆண்களே காரணம் என்றும், இது பருவநிலை மாற்ற பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது எனவும் பீட்டா அமைப்பு கூறியுள்ளது.
“நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் பீர் பாட்டில்களுடன், அசை உணவை சாப்பிடுவார்கள். மாமிசத்தை சாப்பிடுவதன் மூலம் தனது பெருமையை மற்றவர்களிடம் காட்டுவதற்கு ஆண்கள் விரும்புகின்றனர். இறைச்சி சாப்பிடுவதனால் மிருகங்களை துன்புறுத்துவது மட்டுமல்லாமல் பூமிக்கும் கேடு செய்கின்றனர்.” எனவும் பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்கள் தங்களது செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ள பீட்டா அமைப்பு, “இந்த பிரச்னைக்கு தீர்வாக மிகவும் எளிதான, சத்தான வழி என்பது சைவ உணவுக்கு மாறுவதுதான். தங்களது பிள்ளைகள் ஆரோக்கியமான பூமியில் வாழ விரும்பும் அப்பாக்கள்தான் மாமிசத்தை விரும்பி சாப்பிட்டுக் கொண்டு தவறு செய்கின்றனர். அவர்கள் உடனடியாக தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளது.
செக்ஸ் ஸ்டரைக் என்றால் என்ன?
வேலை நிறுத்தம் அல்லது ஸ்ட்ரைக் போன்ற வார்த்தைகள் நாம் அடிக்கடி கேட்பதுதான். பலரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவர். அதுபோல, பெண்கள் அனைவரும் இணைந்து ஆண்களுடன் பாலுறவு கொள்வதை நிறுத்துவதுதான் செக்ஸ் ஸ்டரைக் எனப்படுகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: அடுத்து என்ன நடக்கும்?
லைபீரியா நாட்டில் இதற்கு முன்பு 2003ஆம் ஆண்டு செக்ஸ் ஸ்டரைக் நடைபெற்றது. லைபீரிய அதிபரின் சர்வாதிகார போக்கை எதிர்த்து நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, ஏராளமான வன்கொடுமைகள் அரங்கேறின. இதனால், கொதித்தெழுந்த பெண்கள் செக்ஸ் ஸ்டரைக் போராட்டத்தை முன்னெடுத்தனர். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த இந்த போராட்டம் அந்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்தது.