’அண்ணா, அங்கிள்னு கூப்டாதீங்க’ : Uber டிரைவரின் பாஸ் லெவல் கோரிக்கை: வைரல் பதிவின் பின்னணி

டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் குறித்தும் சவாரி செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் பல செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆப்ஸ்கள் மூலம் ஊபர் போன்ற சேவைகளை பெரும் போது நடக்கும் பல சுவாரஸ்யங்கள், குளறுபடிகள் பலவும் உலவிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், சோஹினி என்ற பயனர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊபர் டிரைவரின் கார் சீட்டில் எழுதியிருந்த வாசகத்தைதான் பகிர்ந்திருக்கிறார். அதில், “யாரும் என்னை அண்ணா என்றோ அங்கிள் என்றோ அழைக்க வேண்டாம்” என அந்த ஊபர் டிரைவர் கார் சீட்டில் எழுதியிருந்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

@Uber_India pic.twitter.com/S8Ianubs4A
— Sohini M. (@Mittermaniac) September 27, 2022

இதனை சோஹினி பகிர்ந்ததும் ட்விட்டர் தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. பொதுவாக ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களை அண்ணா என்று அழைப்பதே வழக்கமாக இருக்கும். இருப்பினும் இதுப்போக ஓட்டுநர்களை என்னச் சொல்லி அழைப்பது என்ற விவாதம் என்னவோ தொடர்ந்து பொதுச்சமூகத்தில் இருந்த வண்ணமே உள்ளது.

When in doubt, check the name on the app
— Uber India (@Uber_India) September 28, 2022

ஆகையால் அந்த வைரல் பதிவில் பலரும், ப்ரோ, ஜி, பாஸ் என பலவாறு அழைக்கும்படி பரிந்துரைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஊபர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்தே கமெண்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதில், “டிரைவரை என்ன சொல்லி அழைப்பது என குழப்பமாக இருந்தால் ஊபர் செயலியில் இருக்கும் அவரது பெயர் என்ன என்று பார்த்து அழைக்கவும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.