தலைவர் போட்டியில் இருந்து விலகல்.. அசோக் கெலாட் அறிவிப்பு..!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருந்தார். இதன் மூலம் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராக வருவார் என்ற வதந்தி வலுத்தது. இருப்பினும், சச்சின் பைலட்டை முதல்வராக்கும் தலைமையின் முடிவை எதிர்த்து கெலாட் தரப்பைச் சேர்ந்த சுமார் 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால், ராஜஸ்தானில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்தார். அப்போது, ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் வருத்தமடைவதாக கூறி சோனியாவிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். போட்டியிலிருந்து கெலாட் விலகுவதால், தலைவர் பதவிக்கான முக்கியப் போட்டி சசி தரூருக்கும் திக்விஜய் சிங்குக்கும் இடையேதான். இந்நிலையில், சோனியா காந்தியை சச்சின் பைலட் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.