பிளாட்ஃபார்ம் டிக்கெட்… கொஞ்ச நாளைக்கு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிடாதீங்க மக்களே!

ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் தற்போது 10 ரூபாயாக உளளது. இந்த கட்டணம் 20 ஆக உயர்த்தப்படுவதாகவும், அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 2023 ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு,ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு குறிப்பிட்ட நாட்களுக்கு அமலி்ல் இருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பண்டிகை நாட்கள் வருவதால், இந்நாட்களில் ரயில் நிலைய நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் உயர்தத்ப்படுவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை தொடர்ந்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் தெற்கு ரயில்வே இவ்வாறு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.