டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி உள்ளார். தலைமை பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த நிலையில், அந்த பதவியை பிடிக்க அசோக் கெலாட் களமிறங்கினார். இதையடுத்து, அவர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அங்கு துணைமுதல்வர் சச்சினை மாநில முதல்வராக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது.
ஆனால், சச்சின் மீதான கோபத்தால், கெலாட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம், ராஜினாமா மிரட்டல் விடுத்து வந்தார். இதனால், சச்சினை பாஜகவுக்கு இழுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி களையும் அபாயம் உருவானது. இதையடுத்து, காங்கிரஸ் தலைமை கெலாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று கட்சி தலைவர் சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், ‘ தான் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகுவதாகவும், இதனால் ஏற்பட்ட அரசியல் சச்சரவுகளுக்கு சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாகவும்’ அவர் தெரிவித்தார்.