உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பி உள்ள அந்த கடிதத்தில், ‘இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் பல ஆண்டுகளாக தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.
தொழில் வழி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படாத நிலையில் சம்பள கணக்கு அலுவலகத்தில் தொழில் பிடித்தம் செய்யக்கூடாது என வற்புறுத்தி வருவதாகவும், அதனால் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும் தொழில் வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசுத்துறை மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 12 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் தொழில்வரி செலுத்தி வரும் நிலையில், உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.
நீதிபதி சுப்ரமணியம், நீதிமன்ற பணியாளர்களுக்கான தொழில் வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த 24 ஆண்டுகளாக இந்த விஷயம் நிலுவையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.