ஒட்டாவா :’பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்’ என, கனடா தன் நாட்டு மக்களுக்கு வினோத ஆலோசனை வழங்கிஉள்ளது. இது குறித்து, அந்நாடு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில், பாக்., நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.அப்பகுதிகளில் கண்ணி வெடி அச்சுறுத்தல் உள்ளது.
மேலும், இந்தியா முழுதும் பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்கும் அபாயம் இருப்பதால், கனடா மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக, கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.இதையடுத்து, அங்கு உள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது.இதை மனதில் வைத்து, கனடா அரசு வீம்புக்கு இந்த ஆலோசனையை தன் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement