தமிழகத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட பி.எப்.ஐ., முயற்சி அம்பலம்| Dinamalar

புதுடில்லி :தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இஸ்லாமிய அமைப்பான, பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் தடை செய்யப்பட்டவையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், மத ரீதியில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது :இது ஏதோ திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீண்ட காலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை உறுதி செய்யப்பட்டே, இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடத்திய பல சோதனைகளில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. 2047ம் ஆண்டுக்கான செயல்திட்டம் என்ற பெயரில், நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றுவது அவர்களுடைய நோக்கமாகும்.இதற்காக, பயங்கரவாதம் வாயிலாக மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, மதத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர்களை மதத் தீவிரவாதிகளாக மாற்றுவது, நாடு முழுதும் மதக் கலவரம் ஏற்படுத்துவது என, பல சதி திட்டங்களை இவர்கள் வகுத்துள்ளனர்.

கேரளா, தமிழகம் உட்பட சில தென் மாநிலங்களில் இதற்காக சிலரை தேர்வு செய்து பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.தமிழகத்தில் கொடைக்கானல் அருகே உள்ள வட்டகனல் பகுதிக்கு வரும் வெளிநாட்டவர் மீது, குறிப்பாக யூத மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிஇருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.