புதுடில்லி :நாடு முழுதும் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள குழுக்களை கண்காணித்து கைது செய்வதற்காக, ‘ஆப்பரேஷன் கருடா’ என்ற அதிரடி நடவடிக்கையில் சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பஞ்சாப், புதுடில்லி, ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், மஹாராஷ்டிரா உட்பட எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சந்தேகத்திற்கு இடமான 6,600 பேரை சி.பி.ஐ., அடையாளம் கண்டது. இதுவரை 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 175 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு, உளவுப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ., தரப்பு நேற்று தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement